சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் பிடியில் உள்ள கிராமத்தில் அமெரிக்க கூட்டுப்படை  வான் தாக்குதலை நடத்தியது. 

அப்போது போர் விமானங்கள் ஐ.எஸ். இயக்கத்தினரின் நிலைகள் மீது குண்டுகளை வீசியவேளையில் தவறுதலாக மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் குண்டுகளை வீசி விட்டன.

இந்த தாக்குதலில் சிறுவர்கள் 11 பேர் உள்பட பொது மக்கள் 56 பேர் பலியாகினர்.

மக்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேற முற்பட்டபோது குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்து விட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.