கொரோனா தொற்றுக்கு சிகிச்சை - கிழக்கு மாகாணத்தில் மாவட்டம் தோறும் தலா ஒரு வைத்தியசாலை

Published By: Digital Desk 4

11 Oct, 2020 | 01:27 PM
image

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகளுடன் கூடியதாக கிழக்கு மாகாணத்தில் மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையைத் தயார்படுத்துமாறு சுகாதார அமைச்சு பணித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. லதாகரன் தெரித்துள்ளார்.

மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக பயன்படுத்தும் திட்டத்திற்கு அமையவே இந்நடவடிக்கை இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை சுகாதார பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகள் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் தீவிரமடைந்தால் இன்னும் தேவைக்கேற்ப பல வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றியமைக்க சுகாதார அமைச்சு முடிவுசெய்துள்ளது” என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. லதாகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24