கொரோனா தொற்று ஒருபுறம் நாட்டில் வியாபிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் அதுவே பேசுபொருளாக மாறியுள்ளது.
மீண்டும் வீட்டில் இருந்தவாறு வேலை செய்யும் நிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு நிறுவனங்களும் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்தவாறு கடமையை செய்யுமாறு தங்கள் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.
இதுவரை ஓர் கிராமம், ஓர் ஊர் என்ற நிலையில் பீடித்திருந்த கொரோனா தொற்று தற்பொழுது " அயல்வீடு" என்று கூறும் அளவுக்கு நெருங்கி வந்துவிட்டது.
நேற்றைய நிலைவரத்தின் அடிப்படையில் தாதியர், மீனவர், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலுக்கு தோற்றும் மாணவர்கள் என பலரையும் தாக்கியுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4623 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொழும்பில் உள்ள லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் இதற்கு இலக்காகி உள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை திட்டமிட்டபடி இன்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றுவருகிறது.
மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 7ஆயிரம் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திட்டமிட்டவாறு உயர்தரப் பரீட்சையும் நடைபெறவுள்ளது." நிலவுக்கு பயந்து பரதேசம் போக முடியுமா"? என்று கேட்பது உண்டு. அந்த நிலைமையே இன்று இந்த கொடிய நோய் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பாதுகாப்பான ஓர் இடம் இல்லை என்ற நிலைமையே இன்று பொதுவாக உருவாகி உள்ளதைக்காண முடிகிறது.
அரசாங்கம் ஊர் முடக்கத்தையோ ஊரடங்குச் சட்டத்தையோ அமுல்படுத்துவதன் வாயிலாக இதன் பரவலை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்பதால் அது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
எனவே கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் இது ஆட்கொல்லி நோய் என்பதால் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது அனைவரதும் கடமையாகும்.
எவருக்கு தொற்று உள்ளது என்பதை எவராலும் கூற முடியாது என்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் பொது இடங்களுக்கு செல்வோர் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதுடன் பாதுகாப்பு நடைமுறைகளை கையாளுவது அவசியம்.
கொரோனாவின் மூன்றாவது அலை எனக் கூறப்படும் தற்போதைய பரவலைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க நாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவது அவசியம். அதற்கு ஒரே வழி நாம் நம்மைப் பாதுகாப்பதாகும் என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகிறோம்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM