அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆன பிறகு தன் முகத்தை கண்ணாடியில் பார்த்த நடிகை திரிஷா. நேரிலேயே இப்படி பயமுறுத்துகிறோமே, பேய் படத்தில் நடித்தால் உண்மையிலேயே ரசிகர்களை பயமுறுத்தலாம் போலிருக்கிறதே என்று எண்ணிய தருணத்தில், அவருடைய மேலாளராக இருந்த கிரி, இவரை நாயகியாக வைத்து நாயகி என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் பேய் படமொன்றை தயாரித்து வெளியிட தீர்மானித்து இவரை தொடர்பு கொள்ள இவரும் மகிழ்ச்சியுடன் ஓகே சொல்லிவிட்டார்.

படம் கடந்த வாரம் தெலுங்கில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் யாரையும் பயமுறுத்தவில்லை. மாறாக படத்தின் தயாரிப்பாளரைத்தான் மோசமான வசூலால் பயமுறுத்தியதாம். இந்நிலையில் இப்படத்தை தமிழில் ஒரேயொரு மாற்றத்தை மட்டும் செய்து வெளியிட எண்ணியிருக்கிறாராம் தயாரிப்பாளர். தெலுங்கு ரசிகர்களையே பயமுறுத்தாத திரிஷாவா பேய் படக்கதையில் ஊறித்திளைக்கும் தமிழ் ரசிகர்கள் பயமுறுத்தப்போகிறார்...?

தகவல் : சென்னை அலுவலகம்