அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நிலையில் சனிக்கிழமை தனது முதல் பொது நிகழ்வினை நடத்தியுள்ளார்.

நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகயாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி வொஷிங்டன் வெள்ளை மாளிகையிலிருந்து நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் முகக் கவசம் அணியானது உரையாற்றிய ட்ரம்ப்,  “சட்டம் ஒழுங்கு” பிரச்சினைகள் குறித்து பேசினார்.

கொவிட்-19 க்கு சாதகமாக பரிசோதித்த 10 நாட்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று ஜனாதிபதி மீண்டும் பொது நிகழ்வுகளை நடத்த முடியும் என்று வெள்ளை மாளிகையின் வைத்தியர் சீன் கான்லி கூறியதை அடுத்து ட்ரம்பின் இந்த உரை நிகழ்த்தப்பட்டுள்ளது.