நகம் கடிக்கும் சிறார்கள் நாளடைவில் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை நோய்க்கு ஆளாகுவதாக நியூஸிலாந்து ஒடாகோ பல்கலை கழக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

குழந்தைகள் தூங்கும் போதோ அல்லது விளையாடிக் கொண்டிருக்கும் போதோ தங்களின் கட்டை விரலை வாயில் வைத்து சூப்புவதை காண்கிறோம். சில சிறார்கள் அதாவது 5,7 மற்றும் 9 வயதுள்ள சிறார்கள் நகம் கடிக்கும் பழக்கத்தையுடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நாளடைவில் ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி தாக்கக்கூடும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

அத்துடன் இது குறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்களிடம் பரிசோதனை நடத்தியதில் நகம் கடிக்கும் 49 சதவீத சிறார்கள் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 38 சதவீத விரல் சூப்பும் குழந்தைகளும் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். இவர்கள் குறிப்பாக பூனை, நாய், குதிரை, புல், வீட்டில் உள்ள தூசி பூச்சிகள், மிக மெல்லிய மற்றும் கண்ணுக்குப் புலப்படாத ஆகாய வெளியில் உருவாகும் பூஞ்சை காளான் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இவர்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறது என்றும், இதனை கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் இவர்கள் ஆஸ்துமா பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.

எனவே உங்களுடைய குழந்தைகளை விரல் சூப்பும் பழக்கமிருந்தால் அதனை நாசூக்காக தவிர்க்க முயலுங்கள். அதேபோல் பாடசாலையில் படிக்கும் உங்களது பிள்ளைகள் தங்களின் நகங்களை கடிக்காவண்ணம் பாதுகாத்திடுங்கள். அத்துடன் இவ்விரண்டு பழக்கமுடையவர்கள் ஏதோ வெளியிட முடியாத மன உளைச்சலுக்கு ஆளாவதாலேயே இப்பழக்கத்தை மேற்கொள்வதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டொக்டர் S.பாலகோபால்

குழந்தைகள் நல நிபுணர்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்