காங்கேசன்துறையில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 20 வயது இளைஞன் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமலையில் உள்ள வீட்டில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் சந்தேக நபர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.