பிரான்ஸ் ஓபன் (பகிரங்க) டென்னிஸ் தொடரின் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் சோஃபியா கெனினை  வீழ்த்தி ஸ்வீடெக் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

சனிக்கிழமையன்று ரோலண்ட் கரோஸில் நடந்த இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையான சோஃபியா கெனினை 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இகா ஸ்வீடெக் கிராண்ஸ்லாம் பட்டத்தை தனதாக்கினார்.

இதன் மூலம் மகளிர்க்கான கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் கிண்ணத்தை வென்ற முதல் போலாந்து டென்னிஸ் வீரர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கினார்.

இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் 54 ஆவது இடத்தில் இருக்கும் அவர் 17 ஆவது இடத்திற்கு முன்னேறுவார்.