சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் நிலையன ஆட்டத்தின் மூலமாக பெங்களூரு அணி 169 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 25 ஆவது போட்டி இன்றைய தினம் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.

துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர் பெங்களூரு அணி/ முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை குவித்தது.

பெங்களூரு அணி சார்பில் தேவ்தூத் படிக்கல் 33 ஓட்டங்களையும், பின்ஞச் 2 ஓட்டங்களையும் டிவில்லியர்ஸ் டக்கவுட்டுடனும், வோஷிங்டன் சுந்தர் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, அணித் தலைவர் விராட் கோலி மொத்தமாக 52 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 90 ஓட்டங்களுடனும், சிவம் டூப் 22 ஓட்ங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் சர்துல் தாகூர் 2 விக்கெட்டுக்களையும் சாம் குரன் மற்றும் தீபக் சாகர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

Photo Credit ; ‍‍ IPL