அகில உலகம் புகழ்பெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம் கிராமத்தில் தேவி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம், தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் சுமார் 6 தலைமுறையாக நடத்திவரும் இத்திருவிழா தேவி ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும், அன்னை தேவி ஸ்ரீ முப்புடாதியம்மனுக்கும், மகன் வைரவருக்கும் கடந்த 27 வருடங்களாக நடைபெற்றுவருகிறது.
ஆண்டுதோறும், புரட்டாசி 3 ஆம் செவ்வாய் நடைபெறும் திருவிழாவிற்கு புரட்டாசி முதலாம் திகதி முதலே பக்தர்கள் கடும் விரதமிருக்கின்றனர்.
புரட்டாசி முதலே தினமும் இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான அக்டோபர் 5ஆம் திகதி மாலை : தீச்சட்டி ஊர்வலம் நடந்தது, இரவு : சங்கரன்கோவில் புகழ் ஆன்மீக இன்னிசைகச்சேரி நடைபெற்றது.
தொடர்ந்து நள்ளிரவில் தேவி ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு சிறப்பு மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்புபூஜை நடைபெற்றது.
2 ஆவது நாள் செவ்வாய்க்கிழமை காலை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரியை இறைபக்தியுடன் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர் தொடர்ந்து
மதியம் : பூக்குழிக்கான விறகு ஏற்றி வருதல் வருதலும், மதியம் : மாபெரும் அன்னதான நிகழ்வும், மாலை : குற்றால தீர்த்த ஊர்வலம் நடைபெற்றது. இரவு : மணிசங்கரம்மாள் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
புதன்கிழமை பூக்குழி இறங்குதல்:
அதிகாலை 5 மணியளவில் 21அடி நீளம் கொண்ட பூக்குழியில் பூவளர்த்து, அன்னை தேவி ஸ்ரீமுப்புடாதி அம்மன் ஆலயத்தில்வைத்து உலகின் அனைத்து தெய்வங்களையும் எழுந்தருளசெய்து புதன் அதிகாலை 6 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர். பின்னர் மஞ்சள் நீராட்டும் தொடர்ந்து அம்மனுக்கு மகா சிறப்பு பூஜையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. விழாவைக்காண அய்யாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மூன்று (05, 06, 07) நாள் திருவிழா ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு அய்யாபுரம் ஊர் நாட்டாண்மைகளும் பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
5 நாள் கொடையாக அன்னை தேவி ஸ்ரீமுப்புடாதிஅம்மனுக்கு சித்திரைமாதத்திலும், 2 நாள் கொடையாக மகன் பவரவருக்கு தை மாதத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM