காலணித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்ட இலங்கை தீவின் அபிமான மிக்க இராணுவம் 1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி, 1949 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க இராணுவச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாக மாறியதனையடுத்து ஆரம்பத்தில் சிலோன் இராணுவம் என உருவாக்கப்பட்ட அமைப்பானது இலங்கை இராணுவம் என பெயர் மாற்றம் பெற்றது. 

இன்று இலங்கை இராணுவமானது சகல இனத்தவர்களையும் உள்ளடக்கிய உதவிப்படை, காலாட்படை மற்றும் சேவைப்படை எனும் வகுதிகளுக்குள் 24 படையணிகள் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளுள் உள்வாங்கப்பட்டுள்ளது.  

இலங்கை இராணுவம் இந்நாட்டில் நீண்ட காலமாக நிலை கொண்டிருந்த பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையினை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தியது.

யுத்தத்தின் பின்னர் இராணுவத்தின் போக்கு மாற்றம் பெற்று தேசத்தின் பாதுகாப்பிற்கும் அபிவிருத்திற்கும் தனது முழுமையான பங்களிப்பினை முன்னெடுக்கின்றது. 

2009 ஆம் ஆண்டில் நிறைவுற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர், இலங்கை இராணுவமானது நாட்டு மக்களின் வாழ்கைத்தரத்தினை மேம்படுத்தும் முகமாக பல்வேறு கட்டுமான பணிகளில் தன்னை அர்பணித்துள்ளது. 

அந்த வகையில் வீடற்ற வறிய குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மானித்து கொடுத்தல், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் மதஸ்தானங்கள் போன்ற பொது இடங்களை நிர்மானித்தல் மற்றும் புனர்நிர்மானம் செய்தல், வீதிகள் விஸ்தரித்தல், செப்பனிடல், மைதானங்கள் மற்றும் கேட்போர் கூடங்களை புனரமைத்தல், விளையாட்டு அரங்குகள் மற்றும் மேம்பாலங்கள் அமைத்தல் மற்றும் பலநோக்கு கட்டிடங்களை நிர்மானித்தல் போன்ற சிலவற்றை குறிப்பிடலாம்.

ஒரு நாட்டு இராணுவத்தின் கடமைகள் மற்றும் வகைக்கூறலானது பரந்துப்பட்டதாக காணப்படுகிறது. 

அந்த வகையில் இராணுவத்தின் முதன்மை பணியானது நாட்டுமக்கள், உடமைகள் மற்றும் எல்லை ஆகியவற்றினை பாதுகாத்தல் ஆகும். 

அந்த வகையில் வெள்ளப்பெருக்கு, சூறாவெளி, நிலச்சரிவு மற்றும் காட்டுத்தீ போன்ற திடீர் அனர்தங்களின்போது மீட்பு பணிகளில் ஈடுபடுகிறது. 

இதற்காக நாடு முழுவதும் துறைசார் நிபுணத்துவம் பெற்ற படைக் குழுக்களை விரைந்து நடவடிக்கை எடுக்க கூடிய வகையில் நிலை நிறுத்தித்தியுள்ளது.

முழு உலக நாடுகளையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவை ரசின் பரவலை கட்டுப்படுத்துவதில் அதிக பங்களிப்பினை செய்த ஒரே அமைப்பு இலங்கை இராணுவமாகும். 

தற்போதைய இராணுவத் தளபதியும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் சிறந்த முகாமைத்துவ திறன்களுக்கு அமைவாக இலங்கை இராணுவத்திடமுள்ள திறமையான ஆளனி வளங்கள் மற்றும் நுட்பங்களை பயன்படுத்தி நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றின் பரவலானது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. 

 

இதற்காக நாடு முழுவதும் 85க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்கள் கொரோனா சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகள் என்பனவற்றை குறுகிய காலத்திற்குள் நிர்மானித்து மாபெரும் பங்களிப்பை வழங்கியது.  

நாட்டின் முடக்கத்தின்போது, பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்த மக்களுக்கு மரக்கறிவகைகள், உணவு பொருட்கள், சமைத்த உணவுகள், மருந்து பொருட்கள் போன்ற அத்தியவசிய தேவைகள் பலவற்றை நிவர்த்தி செய்தது. 

தேசத்தின் நலனில் இராணுவம் முன்னிலை வகிக்கின்றது என்பதற்கு இராணுவத்தின் சமீபத்திய கொரொனா கட்டுப்பட்டு தனிமைப்படுத்தல் நுட்பமானது ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இதனூடாக இராணுவம் தேசத்தின் பாதுகாவலர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கைத் திருநாட்டின் முதுகெலும்பாக திகலும் விவசாயத்துறையின் மேம்பாட்டில் இராணுவத்தின் நடவடிக்கைகள் தளபதியின் எண்ணக்கருவான துரு மிதுரு நவரட்டக் எனும் இராணுவத்தின் விவசாய மேம்பாடு மற்றும் நாட்டை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

அந்தவகையில் நடாளவிய ரீதியில் காணப்படும் தூர்ந்த மற்றும் சேதமடைந்த குளங்களை புனர்நிர்மானம் செய்து அதனூடாக பெருமளவான பயிர்செய்கை நிலங்களை போசணை செய்தது. 

அது மற்றுமன்றி நாடு முழுவதும் காணப்படும் இராணுவ விவசாய பண்ணைகளில் நெற்செய்கை, தென்னை, மா மற்றும் பிற நீண்ட கால பயன்தரும் மரங்களை நடும் செயற்றிட்டங்களும் மூலிகை தோட்டங்கள் உருவாக்களும், நாட்டின் காடுகளின் பரப்பை செரிதாக்கலும், அதிகரித்தலும் போன்ற திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் தனது முதன்மை கடமைகளில் ஒன்றான அரசின் நிர்வாகத்திற்கு ஒத்தழைப்பு வழங்கலின் கீழ் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் புதிதாக அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கான தலைமைத்துவ மற்றும் ஊக்குவிப்பு பயிற்சி நெறி வழங்கும் பொறுப்பை இராணுவம் பெற்றுக்கொண்டது. 

ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசணைக்கு அமைவாக இராணுவத் தளபதியின் வழிக்காட்டலில் இராணுவத்தின் பயிற்சிப் பணிபகத்தினால் தயாரிக்கப்பட்ட முழுமையான பாடவிதானம் மற்றும் செயன்முறைகளுக்கு அமைவாக பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஐந்துக் கட்டங்களாக ஒவ்வொன்றும் 21 நாட்கள் கொண்ட பயிற்சி வழங்கலை இராணுவத்தின் 51 முகாம்களில் முன்னெடுக்கப்படுகின்றது . இதன் கட்டம் 1 வெற்றிகரமாக நிறைவுக்கு  வந்துள்ளது.

தேசத்தின் நலனுக்காக தங்களை அர்பணித்த மற்றும் அர்பணித்துக் கொண்டிருக்கும் இராணுவத்தினரால் தாய்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியாகவும் பல சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை 1957 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளில் தனது பணியை ஆரம்பித்தது. 

பின்னர், 1960 முதல் 1962 வரை கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (MONUC) அமைதிகாக்கும் பணிக்காக ஒரு சிறிய அளவிலான படைப்பிரிவை வழங்கியது. 

தற்போது ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக அதிகமான படையினரை வழங்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் பணியாற்றிய இலங்கையின் முதல் இராணுவ அதிகாரியாக தற்போதய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் திகழ்கின்றார்

பல தசாப்த காலமாக, இலங்கை இராணுவம் நியூயோர்க், சாட், மத்திய ஆபிரிக்க குடியரசு, லெபனான், கொங்கோ, ஹைட்டி, மாலி, தென் சூடான், எத்தியோப்பியா, புருண்டி, அபேய் மற்றும் மேற்கு சஹாரா போன்ற பல நாடுகளில் பணியாற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவம் குறிப்பிட்ட சில நாடுகளில் உலகளாவிய அமைதிகாக்கும் பணிகளுக்கு அதனுடைய பங்களிப்பினை வழங்கியமைக்காக ஐ.நா.வின் சர்வதேச ஐ.நா. பதக்கங்கள் (UN Medals) வழங்கப்பட்டன.

2014 ஆம் ஆண்டில் தென்சூடானின் போர் நகரில் தனது முதல் ஸ்ரீ மெட்லெவல் 2 வைத்தியசாலையை நிறுவுவியது. 

ஐக்கிய நாடுகள் சபை மிஷனால் நன்கு பாராட்டைப் பெற்ற குறித்த வைத்தியசாலையானது சத்திர சிகிச்சை கூடம், பிரசவ அறைகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், அவசர கிச்சைப் பிரிவுகள், வெளிநோயாளிகள் பிரிவு, பல் அறுவை சிகிச்சை, மருந்தகம், கதிரியக்கவியல் பிரிவு, ஆய்வுக்கூடம், ஈ.சி.ஜிஅறை உயிரியல் மருத்துவ பொறியியல் பிரிவு, சவ உறைவிப்பான் அறை ஆகிய வசதிகளை கொண்ட நவீன வைத்தியசாலையாகும்.

ஐ.நா. அமைப்பிற்கு தங்களது படையினரை வழங்குவதற்கு அப்பால், உலகளாவிய தொழில் நுட்பத்திற்கு சவாலாக இலங்கை இராணுவம் யூனிபஃபெல் (Unibuffel) கவச வாகனத்தை தயாரித்தது. 

இதன் மூலம் இலங்கையானது இராணுவ கண்டுபிடிப்புகளின் ஒரு அடையாளமாக மாறியுள்ளது. அவசர தேவையின் பிரகாரம், இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திரவியல் பொறியியலாலர் படையணியின் படையினரால் தயாரிக்கப்பட்ட ஒன்பது யூனிபஃபெல்ஸ் (Unibuffel) கவச வாகனங்களானது, மாலியில் உள்ள (மினுஸ்மா) அமைதிகாக்கும் பணிக்கு பயன்படுத்துவதற்காக 2020 ஜூன் 26 ஆம் திகதி இராணுவத் தளபதியினால் கையளிக்கப்பட்டன.  

இவ்வருடத்திற்கான கொண்டாட்டங்களில் மத அனுஷ்டானங்கள் கண்டி தலதா மாளகை, அனுராதபுர ஜய ஶ்ரீ மகாபோதி, கொள்ளுபிட்டி ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் கொழுப்பு கொச்சிக்கடை ஶ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரம் ஆலயம்  ஆகியவற்றில் இடம்பெற்றன.

இருப்பினும் சில நாட்களுக்கு முன்னர் எதிர்பாராவிதமாக நாட்டில் மீண்டும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினையடுத்து இலங்கை இராணுவமானது நாட்டின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமையளித்து கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் மறுபடியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

இதனால் ஒக்டோபர் 10 ஆம் திகதி காலி முகத்திடலில் பிரமாண்டமாக கொண்டாடப்படவிருந்த இராணுவ தினமானது இரத்துச்செய்யப்பட்டுள்ளது. 

இராணுவ   ஊடகப்பிரிவு