Published by R. Kalaichelvan on 2020-10-10 15:01:53
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 10 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இதுவரை 3,306 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
அத்தோடு நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 1204 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைகள் பெற்று வருகின்ற நிலையில் , 351 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுருக்கக் கூடும் என வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4523 ஆக உயர்ந்துள்ளது.
எனினும் தற்போதைய நிலவரத்தின் மினுவாங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புகளை பேணிய நபர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக அதிரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.