(செ.தேன்மொழி)

71 ஆவது இராணுவ தினம் இன்று சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இராணுவ தினத்தை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு விடுத்திருந்த  பரிந்துரையின் பேரில், 514 இராணுவ அதிகாரிகள் மற்றும் 14140 இராணுவ சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது 12 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கும், 13 கேணல்கள் பிரிகேடியர் தரத்திற்கும், 47 லெப்டினன் கேணல்கள்  கேணல் தரத்திற்கும், 58 மேஜர்கள் லெப்டினன்ட் கேணல் தரத்திற்கும், 234 கெப்டன்கள் மேஜர் தரத்திற்கும் , 99 லெப்டினன்கள் கெப்டன் தரத்திற்கும் மற்றும் 51 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் தரத்திற்கும் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவும் , இராணுவ தினத்திலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் மொத்தம் 14140 இராணுவ சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளார்.

அதற்கமைய , 318 வொரன்ட் அதிகாரிகள்-2, வொரன்ட் அதிகாரி -1 தரத்திற்கும் , 985 பதவி நிலை சார்ஜென்ட்ஸ், வொரன் அதிகாரி -2 தரத்திற்கும்,  1292 சார்ஜென்ட்கள், ஸ்டாஃப் சார்ஜென்ட் தரத்திற்கும், 3058 கோப்ரல்கள், சார்ஜென்ட் தரத்திற்கும் , 3470 லான்ஸ் கோப்ரல்கள், கோப்ரல்கள் தரத்திற்கும் மற்றும் 4747 சாதாரன இராணுவச் சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல்கள் தரத்திற்கும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.