(எம்.நியூட்டன்)

கொவிட் 19 இன் தாக்கம் அதிகரித்‌துவரும் நிலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இந்திய மீனவர்களுடனான தொடர்புகளைமேற்கொண்டுவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர்பாடலானது கொரோனா மேலும் பரவுவதற்கு சந்தர்ப்பதாக அமையும் என்ற காரணத்தினால் தொழிலுக்குச் செல்லும் மீனவர்களை கடலுக்குள் செல்லும் நேரம் கரைசேரும் நேரம் போன்றவற்றினை பதிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 நோக்த்தாக்கத்தில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான விசேட கூட்டம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் விபரங்களும் அவர்கள் சென்று திரும்பும் நேரங்களும் கையொப்பத்துடன் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது தேவைக்கேற்றபடி மாற்றங்கள் செய்யமுடியும் எனவும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.