யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள அந்தோனியார் தேவாலய கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
வரணியில் அமைந்துள்ள குறித்த அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழா ஆரம்பமாக உள்ள நிலையில் இன்று கிணறு துப்புரவு செய்யப்பட்டது.
இதன்போது சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இருப்பதை அறிந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து கிணற்றில் இருந்து இன்று மாலை ஒரு தொகுதி வெடி பொருட்கள் கொடிகாமம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
12 மோட்டார் குண்டுகளும் ஒரு கைக்குண்டு என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெடி பொருட்கள் மீட்கப்பட்ட வரணி அந்தோனியார் தேவாலய வளாகத்திற்கு முன்பாக இராணுவ முகாம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM