மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

அமைச்சர்களான அனுரபிரியதர்ஷன யாப்பா, கருணாரட்ன பரணவிதான மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இடையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இடைநிறுத்தப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானபீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில், அட்டவனைப்படுத்தப்படாத கண்டிய நடனத்தை அரங்கேற்றியதால்  தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில்  மோதல் இடம்பெற்றது.

இதனையடுத்து யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.