மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் 30 பேருக்கும் , ஊழியர்கள் 3 பேருக்கும்  இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு , அவர்களுடன் தொடர்புகளை பேணிய மேலும் 24 பேருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மேலும் 3 பேருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது எனும் கோணத்தில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக அரசாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.