குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

Published By: Raam

20 Jul, 2016 | 08:43 AM
image

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பை அக்கட்சி அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியான ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைவதையடுத்து புதிய ஜனாதிபதியினை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறுகிறது.

இதில், ஆளும் கட்சியாகிய ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

குடியரசு கட்சியில், ஜனாதிபதி வேட்பாளராக ஆக வேண்டும் என்றால், 1237 பிரதிநிதிகளின் வாக்குகள் பெற வேண்டும். இதில் சில வாக்குகளை மட்டுமே டிரம்ப் பெற வேண்டிய சூழ்நிலை நிலவி வந்தது.

இந்நிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தன்னுடன் களமிறங்கிய குடியரசுக் கட்சி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியதன் மூலம், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அறிவிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளமையினால்,டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகிய இருவருக்கும் இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04