பிரான்ஸிலுள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த இரண்டு பெரிய தீவிரவாத தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ள பிரான்ஸில், ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் மற்றொரு தீவிரவாத நடவடிக்கையாக இருக்குமோ என அந்நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.தெற்கு பிரான்ஸில் உள்ள பொலினி பகுதியில் மெர்சில்லி என்ற நகர்ப்பகுதி பார்முலா-1 என்ற ஹோட்டலில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவன் நுழைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதனை தொடர்ந்து அந்த ஹோட்டலை சுற்றி நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.ஹோட்டலுக்குள் சென்ற மனிதன், அங்கு யாரையும் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளானா? வெடிகுண்டுகள் வைத்துள்ளானா?என பிரான்ஸ் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.