(சபை நிருபர்கள்)
தேசிய வைத்திய அமைச்சின் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களையும், வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் நபர்களையும்இலக்காகக் கொண்டு தேசிய ஓளடதங்கள் பல இதுவரையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு,கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் மேம்பாடுமற்றும் சமூக ஆரோக்கியம் இராஜாங்க அமைச்சர் சிசிரஜெயக்கொடி அவர்கள் தெரிவித்தார்.
ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத மருந்துக்கூட்டுத்தாபனத்துடன் இணைந்து நோய்த்தடுப்பு பானம்மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துக் குளிகள்ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும்தெரிவித்தார்.
இந்த மருந்துகள் அனைத்தும் நூறு சதவீதம் உள்ளூர்மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன என்றும்அவை ‘சதங்கா’ பானம் மற்றும் ‘சுவதரணி’ நோயெதிர்ப்புபானம் என பெயரிடப்பட்டுள்ளன என்றும் அமைச்சர்தெரிவித்தார்.
இந்த மருந்துகள் ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல்அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் இன்றுபாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பாஅபேவர்தனவுக்கு குறித்த மருந்து அறிமுகப்படுத்தப்படும்எனவும் இராஜாங்க அமைச்சர் ஜெயகொடி அவர்கள்தெரிவித்தார்.
மேலும் மேற்கத்திய மருத்துவத்தினால் இதுவரையிலும்கொவிட் -19 வைரஸ் தொற்றை குணப்படுத்த முடியவில்லை,எனவே மேற்கத்திய மருத்துவம் இன்று கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது என்றும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.எவ்வாறாயினும், இந்த சவாலை எதிர்கொள்ளக்கூடியமருந்துகளை உள்நாட்டு மருத்துவ அமைச்சினால் தயாரிக்கமுடிந்ததுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM