நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 18 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இதுவரை 3,296  பூரண குணமடைந்துள்ளனர்.

அந்தவகையில் வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து 9 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து  ஐந்து பேரும், தேசிய தொற்று நோயியல் நிலையத்தில் இருந்து 4 பேருமே இவ்வாறு தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

அத்தோடு நாட்டில் உள்ள 12 வைத்தியசாலைகளில் சுமார் 1,179 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைகள் பெற்று வருகின்ற  நிலையில் , 350 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுருக்கக் கூடும் என வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4,448 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் தற்போதைய நிலவரத்தின் படி நாட்டில் கொரோனா தொற்று வேகமாக அதிரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.