அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் சனிக்கிழமை முதல் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியும் என அவரது மருத்துவர்கள் வியாழக்கிழமை தாமதமாக அறிவித்தனர்.

ஜனாதிபதி டரம்பின் உடல் நிலையானது தற்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகும் எந்தவொரு அறிகுறியை அவரது பரிசோதனை முடிவுகள் வெளிப்படுத்தவில்லை என்றும் மருத்துவர் சீன் கான்லி தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பும் அவரது மனைவி மெலினா ட்ரம்பும் கொரோனா தொற்றுக்குள்ளானமை ஒக்டோபர் முதலாம் திகதி கண்டறியப்பட்டது.