'நிசப்தம்' படத்தை தொடர்ந்து நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியிருக்கும் 'மாறா' என்ற திரைப்படமும் டிஜிற்றல் தளத்தில் வெளியாகிறது.

அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மாறா'.

இப்படத்தில் நடிகர் மாதவன், நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத், நெடுஞ்சாலை பட புகழ் ஷ்வதா மற்றும் மூத்த நடிகர் மவுலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சார்லி' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படம், டிசம்பர் மாதம் 17ஆம் திகதியன்று அமேசான் பிரைம் எனும் டிஜிற்றல் தளத்தில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாதவன் நடிப்பில் வெளியான 'நிசப்தம்' என்ற திரைப்படமும் டிஜிற்றல் தளத்தில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.