மதுபானசாலைகளை திறப்பது தொடர்பில் புதிய அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளன.

ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படாத பிரதேசங்களில், மதுபான சாலைகளை மூடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் அனைத்து மாவட்டங்களிலும் அனுமதி உரிமத்துடன் செயல்படும் பப்களில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சகல மதுபான சாலைகளையும் மூடுமாறு அமைச்சு அறிவித்துள்ளது.