Published by T. Saranya on 2020-10-09 17:08:30
(இராஜதுரை ஹஷான்)
கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பயணம் செய்வதற்கு சுகாதார அம்சங்களை கொண்ட இரண்டு பிரத்தியேக புகையிரத பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பெட்டிகளில் ஏனைய பயணிகள் பயணம் செய்ய அனுமதி கிடையாது. பரீட்சாத்திகளுக்காக மாத்திரமே இந்த புகையிரத நிலையங்களில் புகையிரதம் நிறுத்தப்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் புலமைப்பரிசில் மற்றும், கல்வி பொதுத்தராதர பரீட்சையினை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது. நெருக்கடியான நிலையில் பரீட்சையினை நடத்தும் போது போக்குவரத்து சேவை தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
5 ஆம் தர பரீட்சை நாளை இடம் பெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து செல்லும் விடத்தில் பெற்றோர் பிரத்தியேக வாகனங்களை ஏற்பாடு செய்துக் கொள்வார்கள். இதனால் பொது போக்குவரத்து சேவைக்கு அதிக கேள்வி தோற்றம் பெறாது.
கல்விபொது தராதர உயர்தர பரீட்சை நாளை மறுதினம் ( திங்கட்கிழமை ) தொடக்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மாணவர்கள் பயணம் செய்வதற்கென்று புகையிரதத்தில் இரண்டு பெட்டிகள் பிரத்தியேகமாக ஒதுக்கப்படும்.. இப்பெட்டிகளில் ஏனைய பயணிகள் பயணம் செய்ய முடியாத. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு. பாதுகாப்பு தரப்பினர் ஈடுப்படுத்தப்படுவார்கள்.
தற்போது ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ள பகுதிகளில் உள்ள புகையிரத நிலையங்களின் ஊடாக போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுப்படும் மாணவர்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
றம்புக்கனையில் இருந்து காலை 5.25க்கு கொழும்பு நோக்கி புறப்படும் புகையிரதம் அபேபுஸ்ஸ, பொதலே,வில்வத்த, மீரிகம, பல்லேவல, கினவல, வதுரட, வெயாங்கொட, ஹின்தெனிய, மஹலேகொட, பெம்முல்ல, துரலுவ, கம்பஹா, யாகொட மற்றும் கனேமுல்ல, புலுகஹகொட ஆகிய புகையிரத நிலையங்களில் பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் நிறுத்தப்படும்.
பொல்ஹாவலையில் இருந்து காலை 6.25க்கு கொழும்பு கோட்டை புகையிரத நோக்கி புறப்படும் புகையிரதம் அபேபுஸ்ஸ, பொதலே, வில்வத்த, மீரிகம, பல்லேவல, கினவல , வதுரட , வெயாங்கொட , ஹின்தெனிய இமஹலேகொட பெம்முல்ல, துரலுவ, கம்பஹாஇயாகொட மற்றும் கனேமுல்ல ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்படும்.
கொழும்பு கோட்டை புகையித நிலையத்தில் இருந்து மாலை 3.45 க்கு பொல்ஹாவலை நோக்கி புறப்படும் புகையிரதம் கனேமுல்ல, யாகொட, கம்பஹா, துரலுவ, பெல்முல்ல, மகலகொட, கின்தெனிய, வெயாங்கொட, வதுரவ,ஹீனவல,பல்லெவல, மீரிகள வில்வத்த, போதலே மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய புகையிரதங்களில் நிறுத்தப்படும்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மாலை 4.50 க்கு றம்புக்கனை நோக்கி புறப்படும் புகையிரதம் புலுகஹகொட, கனேமுல்ல, யாகொட, கம்பஹா, துரலுவ, பெம்முல்ல, மகலெகொட, ஹின்தெனிய, வெயாங்கொட, வதுரவ, கீனவல, பல்லேவல, மீரிகம, வில்வத்த, போதலே மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்படும் என்றார்.