கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான பாதுகாப்பு வேலைத்திட்டமாக 2020 ஆம் ஆண்டியில் நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரிட்சைக்காக தோற்றவுள்ள மாணவர்களின் சுகாதார நிலை உள்ளிட்ட ஏனைய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைவாக பரீட்சைகள் நடைபெறுவதற்கு முன்னர் அனைத்து மாணவர்களும் தமது தகவல்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள படிவத்தில் உள்ளிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த தகவல்களை உள்ளிடுவதற்காக குறிப்பிட்ட பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களின் தகவல்கள் https://info.moe.gov.lk/ என்ற இணையவழியூடாக வழங்கமுடியாமல் போனால் தாம் பரீட்சைக்கு தோற்றும் மத்திய நிலையத்தில் தகவல்களை சமர்ப்பிக்க முடியும்.

அத்தோடு இதற்கான படிவம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சை மத்திய நிலைய பொறுப்பதிகாரியிடம் வழங்குவதற்காக வலைய மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இணையவழியூடாக தகவல்களை சமர்ப்பிக்க முடியாமல் போன மாணவர்கள் இந்த படிவத்தில் (ஒரு மொழியில்) பூரணப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும். அத்தோடு இதில் பதிவாகும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்று அனைத்து மாகாண வலைய கல்வி பணிப்பாளர்களுக்கும், பரீட்சை மத்திய நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பரீட்சாத்திகளினால் முழுமைப்படுத்தப்பட்ட தகவல்களின் இரகசிய தன்மையை பாதுகாப்பதற்கு கல்வி அமைச்சு முன்னிற்கின்றது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களின் தகவல்கள் உள்ளீர்க்கப்படுவது அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதேபோன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோரினால் இந்த தகவல்கள் முழுமைப்படுத்தப்பட வேண்டும். முதலில் தகவல்களை உள்ளீடு செய்த பின்னர் தனது அல்லது தமது குடும்பத்தவரின் உடல் நிலைமையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவ்வாறான சந்தப்பத்தில் மீண்டும் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்

இதேநேரம் உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் அனர்த்த நிலையினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்த்து அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், பரீட்சை திணைக்களம், முப்படை மற்றும் பொலிஸார் ஆகியோரை இணைத்து இந்த மத்திய நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

இதற்கமைவாக இந்த காலப்பகுதிக்குள் ஏதேனும் அனர்த்தம் அல்லது பாதிப்பின் காரணமாக பரீட்சைக்கு தோற்றுவது தடை ஏற்படுமாயின் இந்த மத்திய நிலையத்தில் தொடர்புகொள்ள முடியும்.

இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தில் துரித தொலைபேசி இலக்கமான 117 மற்றும் பரீட்சை திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் இக் காலப்பகுதியில் 24 மணித்தியாலமும் செயற்படும்.

பரீட்சைகள் தொடர்பில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளையும் இந்த தொலைபேசியூடாக அறிவிக்க முடியும்.