தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 136 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 49,689  பேர் இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 85 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 9,630 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்தோடு இன்று 9 இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.