உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதற்கு புதிய அறிகுறிகளை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 36 மில்லியன் மக்களை பாதித்து, அதில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை உயிர் பலி வாங்கி, இன்றும் மக்களை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் இந்த தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கான அறிகுறியாக வறட்டு இருமல், தொண்டை எரிச்சல், காய்ச்சல் போன்றவற்றை  மருத்துவ நிபுணர்கள் வரையறுத்தனர். 

ஆனால் தற்போது மேலும் சில அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். தலைவலி, தலை சுற்றல், சோர்வு, பக்கவாதம் ஆகியவற்றையும் தாக்குதலுக்கான அறிகுறிகளாக கண்டறிந்திருக்கிறார்கள். தற்போது கண்டறியப்பட்டிருக்கும் நான்கு அறிகுறிகளும் நரம்பியல் மண்டலம் தொடர்பானவை என்றும்,  கொரோனா வைரஸ், நுரையீரல் மற்றும் சுவாச மண்டலங்களை மட்டும் தாக்காமல், நரம்பியல் மண்டலங்களையும் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். 

இதன் காரணமாக மக்கள் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்திய பாதுகாப்பு அம்சங்களை மேலும் மூன்று மாதங்கள் வரை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.