மக்கள் அவலங்களுக்குள் தத்தளிக்கையில் வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் - டக்ளஸ் காட்டம்

Published By: Digital Desk 3

08 Oct, 2020 | 08:31 PM
image

'குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை' என்று சொல்வது போன்று; இந்த 'மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவற்கு தயாராக இல்லை என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்தியதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு காட்டமான முறையில் பதில் அளித்துள்ளார்.  

நாடாளுமன்றில் இன்று (08.10.2020) எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், தனது பெயரையும், தனது கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு, தவறான – அதாவது ஏற்கனவே இத்தகையவர்களால் காலங்காலமாக கூறப்பட்டு, அவற்றில் எவ்விதமான உண்மைகளும் இல்லை என சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சில அபாண்டமான விமர்சனங்களை மீண்டும் முன்வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர்,  'யுத்தம் நிலவிய காலத்தில், வடக்கிலிருந்த இலங்கை இராணுவத்தினருக்கு 40 ஆயிரம் சவப்பெட்டிகளை அனுப்பி வைக்குமாறு இந்த சபையிலே கூவிவிட்டு, எமது மக்களை பலிக்கடாக்களாக்கிவிட்டு, எமது மக்களுக்கு பயனில்லாத தாம் சார்ந்த கூட்டம் தோல்வியைத் தழுவும் என்பதை அறிந்து, முன்கூட்டியே வெளிநாட்டுக்கு தப்பியோடினார்.

இங்கே மக்கள் அவலங்களுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கையில், வெளிநாட்டில் திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு, புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களைக் காட்டிக் கொடுப்பதற்கும், தான் ஆரம்பத்தில் நாடாளுமன்றம் வந்திருந்த கூட்டுக் கட்சிகளை பலவீனப்படுத்துவதற்குமான  இரகசிய வாக்குறுதியை சம்பந்தப்பட்வர்களுக்கு கொடுத்தே இலங்கை திரும்பிய இவர், காட்டிக் கொடுப்பது பற்றி கதைப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கின்றது.

புலித் தலைமையினது கள்ள வாக்கு ஒத்துழைப்பினால் யுத்தம் நிலவிய காலகட்டத்தில் நாடாளுமன்றம் வந்த இவரை, அடுத்தடுத்த பொதுத் தேரதலில் எமது மக்கள் துரத்தியடித்தனர். தற்போதுகூட தேசிய பட்டியலில் தொங்கிக் கொண்டு வந்துவிட்டு, மீண்டும் பழைய ஊளைகளை இட்டுக் கொண்டு, அனைத்துத் தரப்பினராலும் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார்.

யுத்த காலத்தின் இடைநடுவில் சமாதான ஒப்பந்தம் நிலவியபோது, எமது மக்களிடையே நல்ல பெயரைச் சம்பாதிருந்திருந்த ஒரு பொலிஸ் அதிகாரியை சமாதானம் பேசுவதற்காக அழைத்துச் சென்று கழுத்தறுத்து கொலை செய்ததில் முன்னின்ற இவரைப் போல் நாங்கள் ஒருபோதும் செயற்பட்டதில்லை. செயற்படப் போவதுமில்லை.

இரத்தக் கறைபடிந்த இவரது கொலை, கொள்ளை, நிதி மோசடிகள் தொடர்பில் இவரது கட்சியின் தேசிய அமைப்பாளர் இப்போது பகிரங்கமாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்' என்று சாடியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09