இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

அறிமுக இயக்குனர் அகிலன் இயக்கத்தில் தயாராக இருக்கும் இந்த படத்திற்கு மாராஜதுரை ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதுடன் இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார் ஜீ வி பிரகாஷ் குமார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் அனைவரும் பங்குபற்றினர்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்குகிறது என்றும் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.