மக்களைப் பாதிக்கும் ஒப்பந்தங்களை யாருக்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது - டக்ளஸ்

Published By: Digital Desk 3

08 Oct, 2020 | 08:32 PM
image

ஒப்பந்தங்கள் என்ற பெயரில் நாட்டையும் மக்களையும் பாதிக்கும் எந்தவிதமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றை ஆதரிக்க முடியாது என்று தெரித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறான தீர்மானங்கள் எவற்றையும் மேன்மைதங்கிய ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினால் இன்று (08.10.2020) கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த கருத்தினை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'சுமார் 2000ம் ஆண்டு காலமாக தனித்துவமிக்க இறையாண்மை அடையாளத்தைக் கொண்டதான எமது நாடு, அக்காலந்தொட்டே சர்வதேச தொடர்புகளைக் கொண்ட நாடாகவும் திகழ்ந்து வருகின்றது. அந்த வகையில், அன்று முதற்கொண்டு எமது நாட்டின் பெயரில் பல்வேறு துறைகள் சார்ந்தும் பல்வேறு ஒப்பந்தங்களை காலத்திற்கு காலம் ஆட்சி பீடம் ஏறுகின்ற அரசாங்கங்களினால் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

மேற்கொள்ளக்கூடிய வெளிநாட்டு ஒப்பந்தங்கள் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நன்மை கருதியதாக இருக்க வேண்டும் என்பதில் எமக்கு மாற்று கருத்தில்லை.

அதேநேரம், மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வெளிநாட்டு ஒப்பந்தங்களும் அவை எமக்கு பாதகமாகவோ, நட்டத்தை ஏற்படுத்தும் வகையிலோ மாறுகின்றபோது, அவற்றிலிருந்து நாம் வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை கொண்டிருக்க வேண்டும்' என்று சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50