இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பெண்ணுக்கு

Published By: Vishnu

08 Oct, 2020 | 06:44 PM
image

2020 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு  அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக் கிற்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இலக்கிய நோபல் பரிசு பெற்ற லூயிஸ் க்ளூக் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார். 

பிழையில்லா கவித்துவக் குரலும், அழகும் பொருந்திய கவிதைகளுக்காக லீயிஸ் க்ளக்கிற்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

லூயிஸ் க்ளக் 1943 ஆம் ஆண்டில் நியூயோர்க்கில் பிறந்தவர். எழுத்துப் பணி போக யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். 

1968 ஆம் ஆண்டில் இவர் ஏழுதிய முதல் தொகுப்பான ஃபர்ஸ்ட்பார்ன் நல்ல வரவேற்பை பெற்று அமெரிக்க இலக்கியத் துறையில் லூயிஸிற்கு முக்கிய இடத்தை பெற்று தந்தது.

இவர் எழுதி 1992 ஆம் ஆண்டில் வெளியான வைல்ட் ஐரிஸ் தொகுப்பிற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. இதுபோக அவரது அவெர்னோ (2006), ஃபைத்ஃபுல் அண்ட் விர்ச்சுவஸ் நைட் (2014) ஆகிய தொகுப்புகளுக்கு நோபல் தேர்வுக் குழு புகழாரம் சூட்டியுள்ளது.

ஒக்டோபர் 9 இல் அமைதிக்கான நோபல் பரிசும், அக். 10 ஆம் திகதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது. 

அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையில் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடி வரும் கிரேட்டா துன்பர்க் பெயரும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளமை குறுப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21