நாட்டை முழுமையாக முடக்க  தீர்மானிக்கவில்லை  - பந்துல

Published By: Digital Desk 3

08 Oct, 2020 | 04:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் -19 வைரஸ்  பரவல் காரணமாக நாட்டை முழுமையாக முடக்க  வேண்டிய தீர்மானங்கள் ஏதும் இதுவரையில்  எடுக்கப்படவில்லை.  பொது மக்கள்  அச்சம் கொண்டு  அத்தியாவசிய   உணவு பொருட்களை     தேவைக்கு மேலதிகமாக கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். என வர்த்தகத்துறை அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கம்பஹா மாவட்டத்தில் கொவிட் -19 வைரஸ் தொற்று   பரவவடைந்ததை தொடர்ந்து  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில்  ஏனைய பிரதேசங்களில் மக்கள்   அன்றாட கொள்வனவுக்கு மாறாக அத்தியாவசிய உணவு பொருட்களை கொள்வனவு செய்கின்றமை காண முடிகிறது.

நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய  தேவை ஏதும் இதுவரையில் எழவில்லை . அரசாங்கமும்    அவ்வாறான தீர்மானத்iதை எடுக்கவில்லை. , கொவிட்- 19  வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணும் பிரதேசங்கள் மாத்திரமே தற்போது   ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுமையாக முடக்கப்படும்  என பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.  அத்தியாவசிய பொருட்களை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ள  வேண்டும். உணவு பொருட்களுக்கு  எவ்வித  தட்டுப்பாடும் ஏற்படாது. தற்போது ஊரடங்குசட்டம் பிறப்பித்துள்ள  பகுதிகளுக்கு   அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை பிரதேச செயலக பிரிவு ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அனைத்N மாவட்டங்ளிலும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும்,  அனைத்து நகரங்களும்  கிருமி தொற்று நீக்கி நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும். ஆகவே பொது மக்களும்  தற்போதைய நெருக்கடியான நிலையில் அரசாங்கத்துக்கு  ஒத்துழைப்பு வழங்கி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக...

2025-01-23 17:44:43
news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-23 16:06:37
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07