பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் பாரியளவில் ஊழல் மோசடி - எதிர்க்கட்சி

Published By: Digital Desk 3

08 Oct, 2020 | 04:33 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று நிலைமையை பயன்படுத்தி பாரியளவிலான ஊழல், மோசடிகள் இடம்பெறுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை  முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் இலங்கை முதலீட்டு சபையினால் சகல தொழிற்சாலைகளுக்கும் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் வாரத்திற்கு 5 வீதமானவர்களுக்கு பி.சிஆர் பரிசோதனைகளை நடத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக நான்கு தனியார் வைத்தியசாலைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் 10 இலட்சம் வரையான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவ்வாறாயின் வாரத்திற்கு 50ஆயிரம்  பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் அந்தளவுக்கு பரிசோதனைகளை செய்வதற்கான உபகரணங்கள் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. அதேபோன்று இந்த விடயத்தில் அரசாங்கம் ஒத்துழைக்காது தனியார் வைத்தியசாலைகளுக்கு அதனை வழங்கியிருக்கின்றது.

அதன்பிரகாரம் ஒரு பரிசோதனைக்கு 6ஆயிரத்தி 500 ரூபா என்ற அடிப்படையில் பார்த்தால் வாரத்திற்கு 325 மில்லியன் ரூபாவை செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கான உபகரண  தொகுதிகளை கொண்டு வரவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இது அதிக இலாபத்தை சம்பாதிக்கும் ஒன்றாகவும் அமையலாம்.

எனவே தொழிற்சாலைகளை ஏமாற்றி அவற்றின் உற்பத்திகளை நிறுத்தி அவற்றை மூடும் நிலை வந்தால் எமது ஏற்றுமதிகளுக்கு என்னவாகும். பரிசோதனை நடவடிக்கைகள் நல்லது. ஆனாலும் அது நடக்கும் முறை தொடர்பாக பிரச்சினை உள்ளது. அதனால்  கொவிட் 19 என்ற பெயரில் பாரியளவிலான ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றதாகவே கூறவேண்டியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:37:37
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...

2026-08-12 16:38:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29
news-image

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும்;...

2026-08-12 14:55:46
news-image

ஜனாதிபதி நிதியம் தாமதம்: 25,000க்கும் அதிகமான...

2026-08-12 14:30:06
news-image

சர்ச்சையை ஏற்படுத்திய மகா சங்கத்தினரின் கடிதம்...

2026-08-12 14:28:29
news-image

சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு:...

2026-08-12 14:07:12
news-image

2022 இல் இடைநிறுத்தப்பட்ட அனைத்து வீதித்...

2026-08-12 13:51:34