கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் 'சுல்தான்' படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.
'ரெமோ' படத்தை இயக்கிய இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சுல்தான்'.
இந்தப் படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழில் முதன்முறையாக நடிகை ரஷ்மிகா மந்தனா அறிமுகமாகிறார்.
இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, விவேக்-மெர்வின் இசை அமைத்திருக்கிறார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்திருக்கிறார்.
விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகும் என்றும், தீபாவளி திருநாளன்று முன்னணி டிஜிற்றல் தளத்தில் 'சுல்தான்' வெளியாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM