இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை உறுதி செய்து போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக மாறியுள்ளார், இவரின் யதார்த்தமான நடிப்பினால் சினிமா ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்துள்ளார்.

இவர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியிகியிருந்தன.

இந் நிலையில் தற்போது இப்படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

இப்படத்தை ஸ்ரீபதி இயக்குவதாகவும் ரஜிஷா விஜயன் என்பவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.