கொலை மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் 2 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![]()
றாகம - பட்டுவத்த புகையிரத நிலையத்திற்கருகில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொலை சம்பவங்கள் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பில் உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளதாககுற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்படும் போது சந்தேக நபர்களிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. விசாரணைகளில் 2015 ஆண்டு தொடக்கம் இதுவரையில் கடவத்த, றாகம மற்றும் கந்தான பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 50 திருட்டுச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள், கொலைச் சம்பவமொன்று தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தினர்.
சந்தேக நபர்கள் தேங்காய் பறிக்கும் தோரணையில் வெவ்வேறு பிரதேசங்களுக்கு சென்று வீடுகளில் யாருமில்லாத போது கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். வயோதிபர்களை மிரட்டியும் அவர்களது உடைமைகளை பறித்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
அதற்கமைய 2002 ஆம் ஆண்டு கடவத்த - மங்கட வீதியிலுள்ள வீடொன்றில் தேங்காய் பறிக்கின்ற போர்வையில் சென்ற போது குறித்த வீட்டில் 70 வயதான வயோதிப பெண்ணொருவர் மட்டுமே இருந்துள்ளார்.
அதன்போது குறித்த பெண்ணின் வாயில் துணிகளை அடைத்து, கைகள் இரண்டையும் கட்டி வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். அதனால் குறித்த பெண்ணும் உயிரிழந்ததாக சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM