ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் மோட்டர் ப்ளஸ் லோயல்ட்டி ரிவோட்ஸ், சர்ட்டிஸ் லங்கா ஹோம் நர்சிங் என்ட் ஸ்விஃப்ட் கெயார் உடன் ஒன்றிணைப்பு

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் மோட்டர் ப்ளஸ் பூரண காப்புறுதி உரிமையாளர்களுக்கு சிறப்பான சுகாதார மற்றும் இல்ல தாதியர் சேவைகளை வழங்குகின்றது.

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் மோட்டர் ப்ளஸ், லோயல்ட்டி ரிவோட்ஸ் நிகழ்ச்சியின் கீழ் தமது பூரண காப்புறுதி உரிமையாளர்களுக்கு சிறப்பான சலுகைகளைப் பெற்றுத்தரும் நோக்கில் முன்னணி சுகாதார மற்றும் இல்லங்களுக்கான தாதியர் சேவைகள் வழங்குநரான சர்ட்டிஸ் லங்கா ஹோம் நர்சிங் என்ட் ஸ்விஃப்ட் கெயார் உடன் கைக்கோர்த்துள்ளது.

இச்சலுகையின் ஊடாக ரூபா 3,000 பெறுமதியான வருடாந்த அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்வதால் அவசர வேளைகளின்போது வைத்தியரை அழைத்தல், உதவி தாதியரை அழைத்தல், அம்பியுளன்ஸ் சேவையைப் பெற்றுக்கொள்ளல், 24 மணி நேரம் செயற்பாட்டிலுள்ள வாடிக்கையாளர் சேவை, பாதுகாப்பு உபகரணங்களுக்காக 5% கழிவு, தொலைபேசி மற்றும் ஒன்லைன் மூலமான வைத்திய சிகிச்சைகள் / ஆலோசனைகள், ஆய்வுகூட பரிசோதனைகளுக்காக 5-10% வரையான கழிவு (ஆசிரி வைத்தியசாலையை தவிர்த்து), வெளிநோயாளர் பிரிவு மற்றும் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சைகள், ஆசிரி வைத்தியசாலையின் சாதாரண அறைகளுக்காக 10% கழிவு, சொகுசு அறைகளுக்காக 20% கழிவு போன்ற சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும். 

இதற்கு மேலதிகமாக தங்கியிருந்து தாதியர் சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அன்றாடம் அல்லது மாதாந்தம் கட்டணம் செலுத்துவதன் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். 

நிறுவனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையானது கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றதோடு இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் பிரதான நிறைவேற்று அதிகாரி சந்தன எல் அலுத்கம அவர்கள், தலைமை அதிகாரி வியாபார அபிவிருத்தி ருக்மன் வீரரத்ன அவர்கள், பிரதி விற்பனை தலைமை அதிகாரி நாமலி சில்வா அவர்கள், சர்ட்டிஸ் லங்கா ஹோம் நர்சிங் என்ட் ஸ்விஃப்ட் கெயர் நிறுவன பிரதான பணிப்பாளர் மனோலி விஜேசிங்ஹ அவர்கள், பணிப்பாளர் / பொது முகாமையாளர் சத்திக்கா ரனவன அவர்கள், முகாமையளார் - விற்பனை சஷீ அர்சநாயகம் அவர்கள், பிரதி முகாமையாளர் - திட்டமிடல் விசங்க வீரக்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் மோட்டர் ப்ளஸ் பூரண காப்புறுதி உரிமையாளர்கள் தங்களது பூரண மோட்டர் வாகன காப்புறுதி அட்டையை சர்ட்டிஸ் லங்கா ஹோம் நர்சிங் என்ட் ஸ்விஃப்ட் கெயார் நிறுவன சேவைகளுக்காக பதிவு செய்யும் வேளையில் முன்வைப்பதன் ஊடாக இச்சிறப்பு சலுகைகளை அனுபவித்திடுவதற்கான வாய்ப்புகளுண்டு.

மோட்டர் ப்ளஸ் உரிமையாளர்கள் 075 5 004 004 / 011 2 585 777 / 0777 006793 என்ற இலக்கங்களின் ஊடாக உரிய நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

சர்ட்டிஸ் லங்கா ஹோம் நர்சிங் மற்றும் ஸ்விஃப்ட் கெயார் (தனி) நிறுவனம், சர்ட்டிஸ் லங்கா குழுமத்தின் இணைப்பு நிறுவனமாவதோடு 1992 ஆம் ஆண்டு முதல் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ளது. 

ISO  9001:2015 தரச் சான்றிதழ்களைப் பெற்ற இலங்கையிலுள்ள சிறந்த நம்பகமான இல்லங்களுக்கான தாதியர் சேவை வழங்குநராக நிலைத்திருப்பதோடு 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 03 வருட காலமாக சேவையை வழங்குவதால் ‘சிறந்த நிறுவனம்” என்ற விருதினையும் வென்றுள்ளது.

இலங்கையின் முன்னணி மோட்டார் வாகன காப்புறதியாளரான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் மோட்டர் ப்ளஸ் சந்தைக்குப் பொருத்தமான நவீன காப்புறுதித் தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்குவதோடு நாட்டின் முன்னணி வாகன முகவர் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து, நாடு முழவதும் பரந்த 24/7 நம்பிக்கைக்குரிய சேவையை வழங்கி சந்தையில் 1 மோட்டார் வண்டி காப்புறுதியாளராக தெரிவாகியுள்ளது.