சிறைக்கைதி ஒருவரின் உடலினுள் இருந்து 100 பக்கட்டுகள் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் என்.உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

குறித்த நபரை கடந்த 17 ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைதுசெய்து மாளிகாக்கந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சிறைச்சாலை திணைக்கள புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட போதைப்பொருளில் 29 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் 24 வயதான தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவரென ஆணையாளர் தெரிவித்தார்