50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மஞ்சளுடன் புத்தளத்தில் மூவர் கைது

By R. Kalaichelvan

08 Oct, 2020 | 01:22 PM
image

உடப்பு பூனைப்பிட்டிய மற்றும்  சின்னப்பாடு ஆகிய பகுதியில் நேற்று மற்றும் நேற்று முந்தினம்  கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 1700 கிலோ கிராமிற்கும் அதிக மஞ்சள் கட்டிகளுடன் மூவர் உடப்பு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மஞ்சள் இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட நிலையில் வாகனங்கள் மூலம் வேறு இடங்களுக்கு  ஏற்றிச் செல்ல முற்பட்டபோது 1297 கிலோ கிராம் மஞ்சள் கொண்ட 27 உரைகள் கைப்பற்றப்பட்டன. இதப்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது இயந்திரப் படகு மற்றும் லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. 

சின்னப்பாடு கடற்படைப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சின்னப்பாடு பகுதியில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 403 கிலோ கிராம் மஞ்சள் கொண்ட 19 உரைப்பைகள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உடப்பு, கொத்தாந்தீவு மற்றும் பள்ளிவாசல் பாடு பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மஞ்சள் கட்டிகள் 50 இலட்சம் ரூபாவிற்கு அதிக பெருமதியுடையதென கடற்படையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் மஞ்சள் மற்றும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரப் படகு மற்றும் லொறி ஆகியென மேற்படி விசாரணைகளுக்காக உடப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமானதாக...

2022-10-07 12:32:45
news-image

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை...

2022-10-07 12:10:56
news-image

சர்ச்சைக்குரிய இந்திய நிறுவன மருந்துகள் இலங்கையில்...

2022-10-07 12:10:55
news-image

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம்...

2022-10-07 11:55:23
news-image

வீடொன்றிலிருந்து 6 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்...

2022-10-07 12:15:36
news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 12:12:33
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14