தனியார் துறையினருக்கு வரவு செலவு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா வேதன உயர்வு சரியாக வழங்கப்படுகின்றதா என்பதனை ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் பி.எஸ்.பத்திரன தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சினால் குறித்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த 2500 ரூபா வேதன உயர்வு கிடைக்கபெறாத தனியார் துறையினர் இக் குழுவிடம் தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.

இதுவரையில் குறித்த குழுவிற்கு 200 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.