214 இலட்சம் மோசடிசெய்த மூவருக்கு சிறைதண்டனை

Published By: Robert

10 Dec, 2015 | 04:29 PM
image

(க.கிஷாந்தன்)

214 இலட்சம் நிதி மோசடி தொடர்பாக மூவருக்கு தலா நான்கு வருட சிறை தண்டனையும் தலா 30 இலட்ச ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை (8.12.2015) தீர்ப்பளித்துள்ளார்.

விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

1995 ஆண்டு காலப்பகுதியில் நுவரெலியா பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கியின் தலைவராகச் செயற்பட்ட ரிகில்லகஸ்கட விக்கிரமசிங்க முதியான்சேலாகே குடாபண்டா (70) பணிப்பாளர் சபை உறுப்பினர்களான திசாநாயக்க முதியான்சேலாகே மீகாவத்த (80) மற்றும் கே.எம்.கே.அபேகோன் கெகுலந்தர ஆகியோருக்கே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.பிரேமரத்ன என்பவர் இந்த வழக்கிலிருந்து குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1995 - 1996ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் நுவரெலியா பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக மத்திய வங்கியின் சட்டங்களுக்கு எதிராக 214 இலட்ச ரூபா பெறுமதியான 7445 அந்தர் விதை உருளைக்கிழங்குத் தருவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் அதாவது வங்கியின் ஆறு கிளைகளில் ஒரு சிலருக்கு பணத்திற்கும், ஒரு சிலருக்கு நேரடியாகவும், வங்கி ஊழியர்களுக்கு கடன் அடிப்படையிலும் விதை உருளைக்கிழங்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே குறித்த வழங்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மோசடி தொடர்பாக மாத்தளையில் அமைந்துள்ள மத்திய வங்கியின் கிளைக் காரியாலயமொன்றிற்கு தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்கப்பட்ட தகவல் ஒன்றை அடுத்து இது தொடர்பாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொண்டது. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்து முன்னாள் வங்கியின் தலைவர் உட்பட பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் நால்வருக்கு எதிராக கண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந் வழக்கு 5.3.2007 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு 2010ஆம் ஆண்டு முதல் நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தநிலையிலேயே குறித்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் பிலிமதலாவ பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய சந்தேக நபரான எச்.ஜி.அபேரத்ண என்பவர் மரணமானதை தொடர்ந்து நால்வருக்கு எதிராக வழக்கு முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே ஒருவர் குற்றமற்றவர் எனவும் மற்றவர்கள் குற்றவாலியெனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47