பட்டய முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனமும் ((CIMA), சர்வதேச வர்த்தகச் சம்மேளனம் இலங்கையும் (ICCSL) இணைந்து வழங்கும் ‘இலங்கையின் மிகவும் போற்றப்படும் நிறுவனங்களுக்கான விருது 2020’ (Sri Lanka’s Most Admired Companies Awards 2020) இற்கு ஆசியாவின் முதன்மையான காப்புறுதி வழங்குநரான AIA பிளாட்டினம் அனுசரணையாளராகச் செயற்படுவதில் மிகவும் பெருமையடைகின்றது. 

இது AIA பிளாட்டினம் அனுசரணையாளராகச் செயற்படும் பெருமதிப்புமிக்க விருது வழங்கல் நிகழ்வின் மூன்றாவது வருடமாகும். 

இந்த விருதானது நிறுவனங்களின் நிதியியல் செயற்திறனை மட்டும் கருதாமல் மற்றைய நிறுவனங்களை விட அதிசிறந்த சேவையை வழங்குவதனையும், மற்றும் அவர்களுடைய ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுவான சமூகத்திற்கு நெறிமுறையான மற்றும் நிலைபேறான பெறுமதியை உருவாக்குவதனையும் கருத்திற்கொண்டு அந்நிறுவனங்களைக் கௌரவிப்பதனையே நோக்காகக் கொண்டுள்ளது. 

2020 ஜுன் 30 ஆம் திகதியன்று 5 வருடங்களுக்கு மேலாக வர்த்தகத்தில் ஈடுபடும் மற்றும் 30% அல்லது அதற்கு அதிகமான இலங்கை உரிமையாளரின் பங்கைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் இவ்விருதுக்கான போட்டிக்குத் தகுதிபெறும். 

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பட்டியலிடப்படாத வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் ஆகிய இரு வகையான நிறுவனங்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

AIAஇன் பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், 

‘AIA இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக (*குளோபல் பேங்கிக் எண்ட் பைனான்ஸ் ரிவியு இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது) மற்றும் நாட்டினுடைய பெருநிறுவனத் துறையின் பிரதான பங்கை வகிக்கின்ற நிறுவனமொன்றாகவும் இருப்பதன் காரணத்தினால், இலங்கையில் இந்த வகையில் அமைந்த ஒரேயொரு விருதாகவே இது திகழ்கின்றது என நாங்கள் பாராட்டிக் கௌரவிக்கின்றோம். 

இந்த விருதானது நிதியியல் ரீதியாகச் சிறப்பாகச் செயற்படும் நிறுவனங்களுக்கு உதவுவது, கௌரவிப்பது மற்றும் வெகுமதியளிப்பது ஆகியவற்றை மட்டும் கருதாமல் அந்நிறுவனங்களின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சமூகத்திற்கு நிலைபேறான மற்றும் நெறிமுறைசார் வழியில் பெறுமதியினை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதைக் கருத்திற்கொள்வதும் எங்களுக்கு பாரிய மகிழ்ச்சியைத் தருகின்றது’ என கருத்துத் தெரிவித்திருந்தார். 

AIA இன் சட்ட, செயற்பாடுகள் மற்றும் வெளி உறவுகள் பணிப்பாளர் மற்றும் பிரதான உத்தியோகத்தர் சத்துரி முனவீர கருத்துத் தெரிவிக்கையில், 

‘AIA உலகிலுள்ள மிகப்பெரிய ஆயுள் காப்புறுதி வழங்குநராகத் திகழ்வதோடு வியாபாரத்தில் மிகச்சிறந்து விளங்குவதில் சர்வதேச தரநிர்ணயங்களை வலியுறுத்துவதுடன், வெற்றிகரமான வியாபார நிறுவனமொன்றின் கூறுகளையும் நிலைபேறாகத் தக்கவைக்கின்றது. 

AIAஇலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான வியாபார அனுபவத்துடன் நிதியியல் ரீதியாக வெற்றியடைந்துள்ள நிறுவனங்களையும், நிலைபேறான மற்றும் நெறிமுறைசார் பெறுமதி உருவாக்கும் நிறுவனங்களையும் நிஜமாகவே மதிப்பதுடன் அவைகளை மிகவும் பாராட்டுகின்றது.

மேலும், இதன் காரணமாக இலங்கையின் மிகவும் போற்றப்படும் நிறுவனங்களின் நேர்மையையும் மற்றும் ஒருமைப்பாட்டையும் கௌரவிக்கும் இம்முயற்சியில் நாங்களும் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்’ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

ICCSL இன் தலைவர் டினேஸ் வீரக்கொடி கருத்துத் தெரிவிக்கையில், 

‘இந்த முன்னோடியான முயற்சியானது செயற்திறன் பிரமாணத்தின் ஊடாகத் தனிச்சிறப்பான திறமைக்கு வெகுமதியளிக்கின்றது. 

மேலும், இது மற்றைய நிறுவனங்களையும் மற்றும் தொழில் முனைவோரையும் ஊக்குவிப்பதற்காக உறுதியான நற்பெயருடன் நிறுவனங்களைக் கௌரவிப்பதனையே நோக்காகக் கொண்டுள்ளது.

நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியில் மிகவும் குறிப்பிடத்தக்கதொரு முக்கியமான பங்களிப்பையும் வழங்குகின்ற மற்றும் தங்களுடைய தகுதிக்கான அங்கீகாரத்தை வழமையாகப் பெறாமல் இருக்கின்ற பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் மற்றும் அவற்றுக்கான வசதிகளை வழங்குவதற்கும் இது தனித்துவமானதொன்றாகவே திகழ்கின்றது’ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

‘நாட்டினது பொருளாதாரத்திலும் மற்றும் ஒட்டுமொத்தமான அபிவிருத்தியிலும் குறிப்பிடத்தக்க பெறுமதியினைச் சேர்க்கும் நிறுவனங்களைக் கௌரவிப்பதற்கும் மற்றும் பாராட்டுவதற்கும் தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் AIA இனுடைய கௌரவம், தனித்தன்மை மற்றும் கீர்த்தியுடன் ஒன்றாகப் பயணிக்கும் நிறுவனமொன்றாக இருப்பதிலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். 

AIA இங்கு பிளாட்டினம் அனுசரணையாளராகச் செயற்படுவதன் காரணத்தினால் இவ்விருதுக்கான போட்டியாளர் ஒருவராக இந்நிறுவனம் இருக்காது. எனினும், நிறுவனமொன்றாக AIAஇப்போட்டிச் சூழல் நிகழ்வுக்கு அவசியமான உயர்தரப் பெறுமதிகளை நிச்சயமாகவே உறுதி செய்கின்றது’ என அவர் மேலும் கருத்துத் தெரிவித்திருந்தார். 

விருது வழங்கல் விழாவானது நவம்பர் 10 ஆம் திகதி மாலை 4 மணி முதல் BMICH லோட்டஸ் போல் ரூம் மண்டபத்தில் மிகவும் முக்கியமான பெருநிறுவன மற்றும் பெறுநிறுவனம் சாராத பங்கேற்பாளர்களின் ஒன்றுகூடலுடன் இடம்பெறவுள்ளது.