கொழும்பிலிருந்து புங்குடுதீவுக்கு பயணம் செய்தவர்களை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை

Published By: R. Kalaichelvan

08 Oct, 2020 | 10:53 AM
image

(எம்.நியூட்டன்)

3 ஆம் 4ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்தும் புங்குடுதீவுக்கு பயணம் செய்தவர்களை தொடர்புகொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது

யாழ்.மாவட்டத்தில் புங்குடுதீவு பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் கடந்த 3ம் திகதி இரவு கொழும்பிலிருந்து 4ம் திகதி அதிகாலை புங்குடுதீவை சென்றடையும் வரை பயணித்த பேருந்துகளின் இலக்கங்களும் குறிப்பிட்ட தரிப்பு நிலையத்தில் இருந்து அவை புறப்பட்ட நேரமும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஏற்கனவே அறியத்தரப்பட்டுள்ளது.

எனவே குறிப்பிட்ட பேருந்துகளில் 3ம், 4ம் திகதிகளில் இவருடன் பயணித்தவர்கள் தமது விபரங்களை வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறியத்தருமாறும் பயணம் செய்தவர்களின் விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனவே இந்நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2025-01-13 20:20:29
news-image

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தயாராக...

2025-01-13 16:51:17
news-image

சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் க்ளீன் ஸ்ரீலங்கா...

2025-01-13 15:08:55
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,045 டெங்கு...

2025-01-13 17:22:19
news-image

மருந்துகளை பரிசோதனை செய்ய ஆய்வகங்களை திறக்க...

2025-01-13 13:28:19
news-image

மாகாண மட்டத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவு...

2025-01-13 18:22:40
news-image

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்

2025-01-13 18:31:43
news-image

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட...

2025-01-13 17:16:39
news-image

மருந்துகள் கொள்வனவு தொடர்பில் கொள்முதல் ஆணைக்குழுவுடன்...

2025-01-13 18:02:21
news-image

இலங்கை மருத்துவ சங்கத்தின் 131வது தலைவராக...

2025-01-13 18:18:35
news-image

நண்பனின் தந்தையின் வங்கி இலத்திரனியல் அட்டையை...

2025-01-13 18:06:54
news-image

பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட...

2025-01-13 17:45:25