ஹொரணை - மீமனபலான பகுதியில் நரிக் கடிக்குள்ளான ஒரு வயது பெண் குழந்தை, சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு முற்றத்தில் சகோதரர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையே இவ்வாறு நரியின் கடிக்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தை தனது 5 மற்றும் 6 வயதுடைய சகோதரர்களுடன் வீட்டின் முற்றத்தில், விளையாடிக்கொண்டிருந்தபோது, நரி வருவதை அவதானித்த இரு சகோதரர்களும் அங்கிருந்து வீட்டுக்குள் ஓடிச்சென்றுள்ளனர்.

இச் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த தாய், ஒரு வயதுக் குழந்தையை நரியிடமிருந்து மீட்டுள்ள நிலையில் நரி குழந்தையின் பாதத்தைகடித்துள்ளது.

நரிக் கடிக்குள்ளான குழந்தை சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை கடித்த நரியினை பிரதேசவாசிகள் இணைந்து அடித்துக் கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.