கம்பஹா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

மினுவாங்கொடையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு சிகிச்சையளித்த வைத்தியரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்தா இலபெரும தெரிவித்துள்ளார்.

ஆடை தொழிற்சாலையில் பணபுரிந்த ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து மினுவாங்கொடயில் ஒரு புதிய கொரோனா கொத்தணி பரவல் கண்டறியப்பட்டது.

குறித்த தொழிற்சாலையைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு தனது தனியார் சிகிச்சை நிலையத்தில் வைத்து குறித்த  வைத்தியர் சிகிச்சை அளித்ததாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட வைத்தியரை அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐ.டி.எச்) மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் இலபெரும மேலும் தெரிவித்துள்ளார்.