கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழையும்போது அனைத்து ஊழியர்களும் வெளிச் செல்லும் பயணிகளும் பி.சி.ஆர். சோதனை முடிவினை வைத்திருப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (லங்கா) நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலைய உழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிச் செல்லும் அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்கு மேல் இல்லாத பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அது தவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து செயல்பாட்டு ஊழியர்களிடமும் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும் குறித்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் நேற்றைய தினம் இலங்கையில் முதன் முறையாக ஆகக் கூடுதலான பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி நேற்றைய தினம் 5,608 பி.சி.ஆர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM