வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கத்தினரால் நாளையும், நாளை மறுதினமும் மாகாணம் தழுவிய ரீதியில் சுகவீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Varsity non-academics end 31-day strike | Daily News

சுகாதார சேவைக்குள் கடைமையாற்றிவரும் சாரதிகளை சுகாதாரதுறைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களிற்கு இடமாற்றம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த சுகவீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் முக்கியஸ்தர்கள் கருத்து தெரிவித்த போது,

நாடளாவிய ரீதியில் எப்பகுதியிலும் இல்லாத நடைமுறை வடக்கு மாகாணத்தில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடந்த 35 வருடங்களாக சுகாதார சேவைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களுக்கான இடமாற்றங்கள் எமக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. தற்பொது 35 வருடங்கள் கழித்து இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் 8 மாகாணங்களில் இல்லாத நடைமுறை வடக்கு மாகாணத்தில் மாத்திரம் கொண்டுவரப்பட்டுள்ளமையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக அனைத்து தரப்பிலும் எமது கோரிக்கையை முன்வைத்த நிலையில் எமக்கான சரியான தீர்வினை எவரும் வழங்கவில்லை. 

எனவே எமது கோரிக்கையை முன்னிறுத்தி வடமாகாணம் தழுவிய ரீதியில் நாளையதினம் காலை முதல் சுகவீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவல் காரணமாக  மக்களினதும், நோயாளிகளினதும் நலன்கருதி  அம்புலன்ஸ் வாகன சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் குறித்த சுகவீன விடுப்பில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.