சுனாமியில் காணாமல் போன மகன் 16 வருடங்களுக்குப் பின்னர் வீடு திரும்பியதாகவும் தனது மகன் ஏமாற்றப்பட்டதாகவும் இரு தாய்களுக்கிடையில் எழுந்த பிரச்சினைக்காக கடந்த 2 ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வளர்ப்புத்தாயாக அடையாளப்படுத்தப்பட்ட நூறுல் இன்ஷான் என்பவர் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தார்.
அம்முறைப்பாட்டுக்கு அமைய இன்று (7) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இரண்டாவது தடவையாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, சிறுவனின் வளர்ப்புத்தாய் என அடையாளப்படுத்தப்படும் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த நூறுல் இன்ஷான் மற்றும் சுனாமியில் மகனை பறி கொடுத்ததாகத் தெரிவித்த மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த அபுசாலி சித்தி கமாலியா ஆகியோருடன் அவர்களை விட்டு பல வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்ற அவர்களின் கணவன்மார்களும் ஆஜராகி இருந்தனர்.
உண்மையான பெற்றோர் யார் என்பதை அறியும் மரபணுசோதனை செய்ய தேவையான செலவை ஒரு மாதகால இடைவெளியில் திரட்டுமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அப்பணத்தை கூழித்தொழிலாளியாக உள்ள என்னால் திரட்ட முடியாது என சியானின் தந்தை எச்.எம்.எம்.அமீர் தெரிவிக்க, நவம்பர் 24ஆம் திகதி வரை இரு தரப்பினருக்கும் பணம் திரட்ட காலவசாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு பெற்றோர் என அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கான போக்குவரத்து செலவை மாளிகைக்காட்டு தாயான கமாலியாவின் கணவர் (பிள்ளையின் தந்தை) ஏ.ரஸீன் பொறுப்பேற்பதாக தெரிவித்தார்.
வழக்கு விசாரணை முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சியானின் தந்தை எச்.எம்.எம்.அமீர், DNA பரிசோதனை செய்ய சுமார் 30ஆயிரம் அளவில் செலவாகும் என்கிறார்கள். அந்தளவிற்கு என்னால் பணத்தை திரட்ட முடியாது என்றார்.
16 வருடங்களுக்கு முன்னர் சுனாமியில் மகனைப் பறி கொடுத்ததாகத் தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியா, இப்போது இருப்பது தனது மகன் றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் தான் எனவும், வளர்ப்புத்தாய் என அடையாளப்படுத்தப்படும் நூறுல் இன்ஷான் என்பவர் இவர் தனது மகன் முகம்மட் சியான் எனவும் வாதாடி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM