மும்பை இந்தியன்ஸ் அணியிலுள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள் என மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா பாராட்டியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4 ஆவது வெற்றியை பதிவு செய்தது. .
அபுதாபியில் நடைபெற்ற 20 ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 18.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 57 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியால் மும்பை அணி ஹெற்றிக் வெற்றியை பதிவு செய்ததுடன், 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா கூறுகையில்,
“மும்பை அணி வீரர்களின் செயற்பாடு மகிழ்ச்சியளிக்கிறது. எங்களிடம் நிறைய தரம் இருக்கிறது. அதை சிறப்பாக செய்கிறோம். அனைவரும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
மும்பை அணியிலுள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள். அவர்கள் அந்த நாளில் தங்களது திட்டத்தை சிறப்பாக செயற்படுத்துகிறார்கள்.
மைதான ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்றவாறு சிறப்பாக பந்து வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். அவரது துடுப்பாட்ட முறைகள் நேர்த்தியாக இருந்தன. கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என்று விரும்பினார். ஏனென்றால் அவரால் புதுமையை புகுத்த முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM